உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் கண்டிப்பான தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தனது பள்ளி ஆசிரியருக்காக கார் ஓட்டுநராக மாறிய நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் பலரின் இதயங்களை வென்று வருகிறது.

ரஷ்ய அதிபர் புடின், தனது பள்ளிப் பருவத்தில் தனக்குப் பாடம் கற்பித்த ஆசிரியரைச் சந்திப்பதற்காக, கையில் ஒரு பெரிய பூங்கொத்துடன் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் நேரில் சென்றார். அதிபரையே நேரில் கண்ட அந்த ஆசிரியை மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

 

சந்திப்பிற்குப் பிறகு, தனது ஆசிரியரை டின்னர் (Dinner) அழைத்துச் செல்ல புடின் முடிவு செய்தார். இதற்காகத் தனது அதிகாரப்பூர்வ ‘ஆரஸ்’ (Aurus) ரக காரின் ஓட்டுநர் இருக்கையில் அவரே அமர்ந்தார். உலகின் ஒரு வல்லரசு நாட்டின் அதிபராக இருந்தபோதிலும், தனது ஆசிரியருக்காக ஒரு சாதாரண ஓட்டுநரைப் போல காரைச் செலுத்தி, மாஸ்கோவின் வீதிகள் வழியாக அவரை கிரெம்ளின் மாளிகைக்கு அழைத்துச் சென்றார்.

உக்ரைன் போர் மற்றும் சர்வதேச அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், புடினின் இந்த மென்மையான மற்றும் மரியாதைக்குரிய பக்கம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. “எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும் ஆசிரியருக்கு அளிக்கும் மரியாதையே ஒரு மனிதனை உயர்த்தும்” என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர். எப்போதும் கண்டிப்பான முகத்துடன் காணப்படும் புடின், தனது ஆசிரியரைக் கண்டதும் ஒரு மாணவனைப் போலச் சிரித்தபடி உரையாடியது காண்போரை நெகிழச் செய்துள்ளது.