சேலம் அருகே உள்ள பிரபல கார் ஷோரூம் ஒன்றில், வாடிக்கையாளர் ஒருவருக்குக் காரின் செயல்பாடுகளை விளக்கி ஸ்டார்ட் செய்து காட்டியபோது, எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஷோரூம் ஊழியர் காரை ஸ்டார்ட் செய்தபோது, கார் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சீறிப் பாய்ந்தது. இதில் ஷோரூமின் முன்பக்கக் கண்ணாடிச் சுவர் சுக்குநூறாக உடைந்து சிதறியதுடன், கார் கண்ணாடியைத் துளைத்துக்கொண்டு நேராகச் சாலைக்கு வந்தது. சாலையில் தாறுமாறாக ஓடிய அந்த கார், அங்கிருந்த மின்கம்பம் ஒன்றின் மீது பலமாக மோதி நின்றது.
ஷோரூமில் வாடிக்கையாளருக்கு காரை ஸ்டார்ட் செய்து காட்டிய பணியாளர் – கண்ணாடியை உடைத்துக் கொண்டு சாலைக்கு வந்த கார்
தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதி நின்றது. நல்வாய்ப்பாக காரில் இருந்த ஊழியர் காயங்கள் இன்றி மீட்கப்பட்டார். #SunNews | #Salem | #CarShowroom pic.twitter.com/h58Gd9nGeC
— Sun News (@sunnewstamil) December 24, 2025
“>
இந்த விபத்தின்போது அதிர்ஷ்டவசமாகச் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. காரை ஓட்டிய ஊழியர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், விபத்துக்குள்ளான கார் பலத்த சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
