சமூக வலைதளங்களில் தற்போது ஒரு திருமண வீடியோ காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பொதுவாக திருமணங்களில் சீர் வரிசைகள் வழங்கப்படுவது வழக்கம் தான், ஆனால் இந்தத் திருமணத்தில் மணமகளின் சகோதரன் செய்த காரியம் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது. மணமகனின் குடும்பத்தினருக்கு அவர் தங்கக் கட்டிகளை பரிசாக வழங்கியுள்ளார்.

இந்நிலையில் பெட்டிகளில் அடுக்கப்பட்டிருந்த அந்த தங்கக் கட்டிகளைக் கண்டு மணமகன் வீட்டாரும், அங்கு கூடியிருந்த விருந்தினர்களும் ஒரு நிமிடம் திகைத்துப் போயினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“>

மேலும் சிலர் இந்த பிரம்மாண்டமான பரிசை பார்த்து வியந்தாலும், பலர் இவ்வளவு பகட்டான விளம்பரம் தேவையா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். ஒரு நடுத்தர வர்க்க திருமணத்தில் கற்பனை செய்து பார்க்க முடியாத இந்தச் செயல், ஆடம்பரத்தின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம், இது உண்மையான தங்கமா அல்லது வெறும் காட்சிப் பொருளா என்ற விவாதங்களும் ஒருபுறம் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளன.