மத்திய அரசாங்கம் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை கொண்டு வந்து அதன் மூலமாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பல மாநிலங்களில் ரேஷன் பொருட்கள் தேவையானவர்களுக்கு சென்று அடையாமல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த வண்ணம் இருக்கிறது. இதனால் கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தீவிர நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. அதாவது ரேசன் பொருட்களை வெளியில் விற்றால் அவர்களுடைய காடு ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது.

அந்த வகையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் தகுதி இல்லாத மூன்று லட்சம் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது .மக்களுக்கு ரேஷன் இலவசமாக கிடைக்கவில்லை. மேலும் இதுகுறித்த 95% விசாரணையானது தற்போது முடிவடைந்துள்ளது. ஏராளமான ரேஷன் கார்டுதாரர்கள்  வறுமை கோட்டிற்கு கீழ்  சரியாக வராததால் அவர்களுடைய ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.