வோடாபோன் ஐடியா-வின் Prepaid வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய வி மூவிஸ் அண்ட் டிவி-யின் சேவையின் கட்டணம் ரூ.202 ஆகவும், Postpaid வாடிக்கையாளர்களுக்கு ரூ.199 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல ஓடிடி தளங்களுக்காக தனித்தனியே கட்டணம் செலுத்துவதை விட, ஒரே கட்டணத்தில் பலதரப்பட்ட பொழுதுபோக்கு சேவைகளைப் பெறும் வகையில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனி லிவ், மனோராமா மேக்ஸ் போன்ற பிரபலமான ஓடிடி தளங்களை “வி மூவிஸ் அண்ட் டிவி” ஆப் வழங்குகிறது. அதோடு, டிஸ்கவரி, ஆஜ் தக், ரிபப்ளிக் பாரத், ஏபிபி, இந்தியா டுடே போன்ற 400 க்கும் மேற்பட்ட பிரபல டிவி சேனல்களையும் இந்த ஆப் மூலம் காணலாம்.