சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ என்ற அமைப்பு, தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை நகைச்சுவை மற்றும் மீம்ஸ்கள் மூலம் வெளிப்படுத்தி வரும் இந்த அமைப்பின் நிறுவனர் அபிஜீத் டிப்கேவின் குடும்பத்தினர் வசிக்கும் இல்லத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக மகாராஷ்டிர போலீஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

அதேநேரத்தில், இந்த அமைப்பின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கிடையில், இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. தலைமை நீதிபதியின் கருத்துகளை வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதாகக் கூறி, சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Cockroach Janta Party (@cockroachjantaparty)

“>

இதற்கிடையே, பாஜகவின் முக்கியக் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, இத்தகைய அமைப்புகள் எழுப்பும் கவலைகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மறுபுறம், இந்த அமைப்பின் பெயரில் வரும் போலி இணைப்புகள் மூலம் சைபர் குற்றங்கள் நடப்பதாகக் கூறி போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.