ஆற்றில் மூழ்கிய சிறுவனைத் தனது உயிரைப் பணயம் வைத்து தாயொருவர் மீட்டெடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆக்ரோஷமாகப் பாய்ந்து வந்த ஆற்று நீரில் சிறுவன் சிக்கிக்கொண்டு போராடியபோது, கரையில் இருந்த பலரும் அதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றார்களே தவிர, யாரும் உதவ முன்வரவில்லை.
இந்த இக்கட்டான சூழலில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது மகன் ஆபத்தில் இருப்பதைக் கண்டு துடித்த தாய், ஆற்றுக்குள் பாய்ந்து சென்று அந்தச் சிறுவனை லாவகமாக மீட்டு வந்துள்ளார். இந்தக் காட்சியைக் காண்போரின் கண்கள் கலங்கும் வகையில், ஒரு தாயின் வீரமும், அன்பும் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
Who doesn’t make mistakes? Humans make mistakes. A mother can do anything for her children. Everyone is watching, everyone is shouting but no one came forward to save the child. But a mother jumped into the water without thinking for her children. Salute to such a mother. pic.twitter.com/nS5DhC0GuI
— Dharm (@dhram00) May 25, 2026
“>
மேலும் ஆபத்தான அந்தச் சூழலிலும் கலங்காமல், தன் உயிரை விடத் தன் மகனின் உயிரே முக்கியம் என்று செயல்பட்ட அந்தத் தாயின் செயல், சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. தகுந்த நேரத்தில் அந்தத் தாய் துணிச்சலுடன் செயல்படவில்லை எனில், அது ஒரு பெரிய துயரத்தில் முடிந்திருக்கும் என்பதால், அவரது செயலைப் பலரும் வியந்து பேசி வருகின்றனர்.
