வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பாக ஓராண்டு முழுவதும் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சரின் ஸ்டாலின், வைக்கம்  போராட்டம் தொடங்கிய நூற்றாண்டின் தொடக்க நாள். இன்று வரலாற்றின் முழு முக்கியமான நாள். வைக்கம்  போராட்டம் வெற்றி பெற காரணமாக இருந்த பெரியாரைப் போற்றும் விதமாக வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிடுகிறேன். மேலும் செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாள் அன்று தமிழ்நாடு அரசால் வைக்கம் விருது வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.