
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் கிரைம் தாக்குதல்கள் அதிகரித்து விட்டது. மேலும் இன்றைய காலகட்டத்தில் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களை குறி வைத்து மோசடி கும்பல் ஏமாற்றி வருகிறது.
இந்த நிலையில் வேலை தேடும் பெண்களை குறி வைத்து சில கும்பல் மோசடியில் ஈடுபடுவதால் கவனமுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர். உரிமம் வைத்துள்ள வேலை வாய்ப்பு ஏஜென்சிகளை மட்டுமே வேலைக்கு அணுக வேண்டும். ஆன்லைனில் செல்போன் நம்பர், முகவரி மற்றும் வங்கி பரிவர்த்தனை விவரத்தை பகிர வேண்டாம் என்று போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. மேலும் வேலை குறித்த முடிவை எடுக்கும் முன்பு உறவினர்களுடன் ஆலோசிக்கவும் பரிந்துரைத்துள்ளது.அதே சமயம் தமிழக பெண்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் அவர்களுக்கு போதிய ஆலோசனை வழங்கவும் மற்றும் அறிவுரைகள் வழங்கவும் 181 இலவச உதவி எண் நடைமுறையில் உள்ளது. இதில் அனைத்து பிரச்சனை குறித்தும் ஆலோசனை பெறலாம்.