கேரள மாநிலம் பாலக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் மனோஜ் குமார் (40) என்பவர் வசித்து வந்துள்ளார். நகைக்கடை ஊழியராக இருந்த இவருக்கு திருமணம் ஆகி சித்ரா என்ற மனைவி இருக்கிறார். இவரது மனைவி ஒரு கூட்டுறவு சங்கத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த நிலையில் அந்த கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருக்கும் விஜிஸ் சகாதேவன் என்பவருடன் சித்ராவுக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த விவகாரம் சித்ராவின் கணவருக்கு தெரிய வரவே அவர் தன் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அவரது மனைவி அதை காதில் வாங்கிக் கொள்ளாததால் வேதனை அடைந்த அவர் கடிதம் எழுதி வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சித்ரா மற்றும் அவரது கள்ளக்காதலனிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.