டெல்லியில் அமைந்துள்ள ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த இளைஞர் ஒருவர், காலையில் பணியில் சேர்ந்ததிலிருந்து மாலைக்குள் ராஜினாமா செய்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதிய உணவுக்குப் பிறகு தனது மடிக்கணினியை மேசையில் வைத்து விட்டு வெளியேறிய அந்த இளைஞர், திரும்பவே இல்லை என்ற தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து @Poan__Sapdi என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்த தகவல்படி, “ஒரு நண்பர் சொன்னார், டெல்லியில் உள்ள ஒரு ஸ்டார்ட்அப்பில் சேர்ந்த ஒரு பையன், முதல் நாளே மதிய உணவுக்குப் பிறகு திரும்பவே இல்லை. லேப்டாப்பை மேசையில் விட்டு போனான். பின்னர் அனைவரும் அவரைத் தொடர்பு கொண்டார்கள். அவன் பதிலளித்தான். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு HR-ஐ அழைத்து ‘வேலை செட் ஆகல’னு சொல்லி ராஜினாமா சொல்லி விட்டான்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இணையத்தில் பரவ தொடங்கியதுடன், பலரும் வேடிக்கையான மீம்ஸ்கள், கமென்ட்கள் இட ஆரம்பித்துள்ளனர். ஒருவர், “இந்த அளவுக்கு நேர்மை இருக்கணும்னு யாரும் நினைக்க மாட்டாங்க” எனக் கருத்து தெரிவித்தால், மற்றொருவர், “ஒரு நாள் கூட பொறுமையாக இருக்க முடியாதவர்கள் தான் தற்போது வேலைவாய்ப்பை களவாடுகிறார்கள்” என சாடியுள்ளார்.

இளைஞர்களின் மனநிலையும், தொழில்முறை பணிச்சூழலையும் பற்றிய விவாதங்கள் தற்போது இணையத்தில் சூடுபிடித்துள்ளன.