நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கடமானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 15 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

சத்தியமங்கலத்தில் சில தினங்களுக்கு முன் மான் இறைச்சியுடன் பொம்மன் என்பவர் பிடிபட்ட நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையில், பொம்மன் கொடுத்த தகவலின் அடிப்படையில் மார்வளா பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் வேலை செய்பவர்கள் சேர்ந்து கடமானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து 15 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து வேட்டையாட பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் கடமான் இறைச்சியின் எச்சங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.