
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் வேட்டையை ராணுவம் தீவிரமாக தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் உள்ள கைமோ பகுதியில் தீவிரவாதிகளுக்கு உதவி செய்த இரண்டு பேரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
அதோடு அவர்களுடைய வீடுகளையும் இடித்துள்ளனர். அதுபோக பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகளின் வீடுகளும் இடிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக ஜம்மு காஷ்மீரில் 5 வீடுகளை ராணுவம் தகர்த்தெறிந்துள்ளது. தீவிரவாதத்தில் ஈடுபட்டால் இதுதான் தண்டனை என்ற அளவுக்கு இந்திய ராணுவம் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் எல்லையில் பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவத்தினர் வீரர்களை குவித்து வைத்துள்ளதால் போர் பதற்றமும் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.