தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த 16-ஆம் தேதி முதல் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் கிராமங்கள் தனித்தீவு போல காட்சி அளித்தது. பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில் போலீசாரும் மீட்பு படையினரும் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கிராமங்களில் வெள்ள நீர் வடியாமல் இருப்பதால் உணவு பொருட்கள் இன்றி மக்கள் சிரமப்படுகின்றனர். அவர்களை மீட்கும் பணியில் போலீசாரும் மீட்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் இதுவரை 42 பேர் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.