ஐபிஎல் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துள்ள எம்.எஸ்.தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் கடைசி ஆண்டாக இந்த 2026 ஐபிஎல் தொடர் அமைய வாய்ப்புள்ளதாக சிஎஸ்கே முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசியுள்ள அவர், இந்த ஆண்டு தோனி அணியின் ஆலோசகராகவும் (Mentor), அதே சமயம் ஒரு வீரராகவும் என இரட்டைப் பொறுப்புகளைக் கவனிப்பார் என்று கூறியுள்ளார்.

அணியிலிருந்து தான் வெளியேறப்போகிறோம் என்பதை உணர்ந்து, மெல்ல மெல்ல அணியின் பொறுப்புகளை அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துவிட்டு தன்னை விடுவித்துக்கொள்ள அவர் விரும்புவார் என்றும் உத்தப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.

பல ஆண்டுகளாக சிஎஸ்கே-வின் முகமாக விளங்கும் தோனி, இந்த சீசனுடன் ஓய்வு பெற வாய்ப்புள்ளதாகத் வெளியாகியுள்ள தகவல், ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களையும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.