மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜித்தேந்திர பட்வாரி என்பவர் 100 கிலோ லட்டுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாகவும் கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேச மாநிலத்தில் மிகப்பெரிய வெற்றியை அடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த முறை பாஜகவால் வெற்றியை கொண்டாட முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டர்களும் மக்கள் நலனுக்காக உழைத்து உள்ளார்கள் என்றும் எனவே கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.