திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் விஐபி தரிசனம் செய்ய ₹4,000 லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் மீது இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த விவகாரம் தவெக அரசுக்குச் சில முக்கியமான கிரிட்டிக்கலான கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த லஞ்சப் பணத்தில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களைத் தவிர உயர்மட்ட அதிகாரிகளுக்குப் பங்கில்லை என்பதை அமைச்சர் எப்படி உறுதி செய்தார் என்றும், முந்தைய திமுக ஆட்சியில் ஊழலின் உறைவிடமாக மாறிய இந்தத் துறையில் புதிய தவெக அரசு இதுவரை என்னென்ன அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

வெறும் தரிசனக் கட்டணத்தை ‘ஆன்லைன் ஸ்லாட்’ என்ற புதிய பெயரில் மாற்றுவதால் மட்டுமே முறைகேடுகளைத் தடுத்துவிட முடியாது என்பதால், அமைச்சர் ரமேஷ் வெறும் ஆய்வுகளை நடத்தி அதை சோசியல் மீடியாவில் ரீல்ஸாக வெளியிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், கோவில்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து மக்கள் முன்னிலையில் ஒரு ‘வெள்ளை அறிக்கை’ வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கோவில் பூஜை நிர்வாகங்களில் இந்து அறநிலையத்துறை தலையிடுவதைத் தடுத்து, திருச்செந்தூர் கோயிலைத் திருப்பதிக்கு இணையான நவீன ஆன்லைன் வரிசைக் கண்காணிப்பு முறைக்கு மாற்றும் வகையில் அடிப்படை மாற்றங்களை இந்த தவெக அரசு உடனே முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்திருந்தார்.