செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா என்பதை ஆராய பாறை மற்றும் மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வருவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு இந்திய மதிப்பில் 91,800 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று கூறும் விஞ்ஞானிகள் செலவை குறைப்பதற்கான வழிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். செவ்வாயில் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஏரி அடையாளம் காணப்பட்டுள்ளதால் நுண்ணுயிர்கள் இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.