உத்தரப் பிரதேசத்தில் ஒரு நபர் பொதுவெளியில் ஒரு இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட வீடியோ வெளியாகி, சமூக ஊடகங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் பெண்ணைத் தவறான முறையில் தொட்டுவிட்டு, அங்கிருந்து ஓடிவிடுகிறார்.

இந்தச் சம்பவம் குறித்த வீடியோ பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது பெண்கள் பொது இடங்களில் எதிர்கொள்ளும் பாதுகாப்பின்மை மற்றும் அத்துமீறல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஆவேசத்துடன் கருத்துத் தெரிவித்து, இந்த அடையாளம் தெரியாத நபர் மீது உத்தரப் பிரதேச போலீஸார் உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.