ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை 2026 தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அணிகளை நடத்திய விதம் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் தொடரிலிருந்து வெளியேறிய பின்னரும் ஒரு வாரத்திற்கும் மேலாக கொல்கத்தாவில் சிக்கித் தவித்த நிலையில், இங்கிலாந்து அணி மட்டும் வெளியேறிய 36 மணி நேரத்திற்குள் தனி விமானத்தில் வீடு திரும்பியது எப்படி என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் வான்வெளி கட்டுப்பாடுகள் மற்றும் விமான ரத்துகள் இருந்தபோதிலும், ஐசிசி அனைத்து அணிகளுக்கும் சமமான பயண ஏற்பாடுகளைச் செய்யத் தவறிவிட்டதாகவும், இது பாரபட்சமான செயல் என்றும் வாகன் சாடியுள்ளார்.

“>

 

மேலும், இங்கிலாந்தின் ‘தி ஹண்ட்ரட்’ லீக் தொடரில் இந்திய உரிமையாளர்கள் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்க்கக்கூடும் என்ற தகவலையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், கிரிக்கெட்டில் உள்ளடக்கம் மற்றும் நேர்மை அவசியம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு (ECB) அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.