உத்தரப் பிரதேச மாநில காவல் துறை சீருடையுடன் சக்கர நாற்காலியில் (Wheelchair) அமர்ந்திருக்கும் ஒரு நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபர் சீருடையில் இரு Sub-Inspector உடன் மிடுக்காகக் காட்சியளிப்பதோடு, அவர் அமர்ந்திருக்கும் சக்கர நாற்காலியில் ‘உத்தரப் பிரதேச காவல் துறை’ என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டு மக்கள் வியப்படைந்துள்ளனர். இதனைப் பார்த்த வழிப்போக்கர்கள், அவருக்கு உடல் தகுதித் தேர்வு எங்கே நடந்தது என்று கிண்டலாகக் கேட்க, அவர் மெதுவாகப் பதிலளிக்கும் காட்சிகள் இணையத்தில் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளன.
நிஜமாகவே காவல் துறையில் முறைகேடு ஏதும் நடந்துள்ளதா அல்லது வெறும் வேடிக்கைக்காக இது படமாக்கப்பட்டதா என்பது குறித்து முறையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ‘faizanvlogss’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. “
<a href=”http://
View this post on Instagram
“>
நிஜக் காவலரே ஆனாலும், ஓடிப் பிடிக்கும் பணியை இவர் எப்படிச் செய்வார்?” என்று சமூக வலைதளப் பயனாளர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உண்மைத் தன்மையை விளக்குமாறு காவல் துறை நிர்வாகத்திற்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
