பெரும்பாலான மக்கள் புதிய வீடு அல்லது நிலம் வாங்குவதற்கு வங்கிகளில் வீட்டு கடன் வாங்குவார்கள். இந்த கடன் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றது. நீண்ட காலத்திற்கு இஎம்ஐ மூலமாக மக்கள் திருப்பி செலுத்துகின்றனர். 75 லட்சத்திற்கும் மேலான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் வங்கியின் விதிமுறைகள், கடன் விவரம் மற்றும் கடனை திரும்ப செலுத்தக்கூடிய காலம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள் வெவ்வேறு வட்டி விகிதங்களில் வீட்டுக் கடனை வழங்கி வருகின்றன. அதன்படி இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள் வீட்டுக் கடனுக்கு வழங்கக்கூடிய வட்டி விகிதங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அரசு வங்கிகள்:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 8.50% – 9.85%
பேங்க் ஆஃப் பரோடா: 8.40% – 10.90%
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: 8.35% – 10.90%
பஞ்சாப் நேஷனல் வங்கி: 8.40% – 10.15%
பேங்க் ஆஃப் இந்தியா: 8.40% – 10.85%
கனரா வங்கி: 8.40% – 11.15%
யூகோ வங்கி: 8.45% – 10.30%
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா: 8.35% – 11.15%
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி: 8.50% – 10.00%
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி: 8.40% – 10.60%
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா: 8.45% – 9.80%
தனியார் வங்கிகள்:
கோடக் மஹிந்திரா வங்கி: 8.70% முதல்
ஐசிஐசிஐ வங்கி: 8.75% முதல்
ஆக்சிஸ் வங்கி: 8.75% – 9.65%
HSBC வங்கி: 8.50% முதல்
சவுத் இந்தியன் வங்கி: 8.70% – 11.70%
கரூர் வைஸ்யா வங்கி: 9.00% – 11.05%
கர்நாடகா வங்கி: 8.50% – 10.62%
ஃபெடரல் வங்கி: 8.80% முதல்
தனலட்சுமி வங்கி: 9.35% – 10.50%
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி: 8.60% – 9.95%
பந்தன் வங்கி: 9.16% – 13.33%
RBL வங்கி: 8.90% முதல்
CSB வங்கி: 10.49% – 12.34%
HDFC வங்கி: 8.75% முதல்
சிட்டி யூனியன் வங்கி: 8.75% – 10.50%
