ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில் உள்ள சிர்மாதிக் கிராமத்தில், தன் கணவன் மற்றும் மருமகளின் கள்ள உறவை நேரில் பார்த்து கண்டித்த 55 வயது குடும்பப் பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த குல்சி தேவி என்ற அந்தப் பெண், தனது கணவர் தௌலத் சாவ் மற்றும் மருமகள் பிரீதி குமாரி ஆகிய இருவருக்கும் இடையே இருந்த கள்ளத் தொடர்பை பலமுறை எதிர்த்து வந்துள்ளார். ஒருகட்டத்தில், அவர்கள் இருவரும் அசிங்கமான நிலையில் இருந்ததை நேரில் பார்த்து குல்சி தேவி எச்சரித்ததால் குடும்பத்திற்குள் சண்டை வெடித்துள்ளது.
இதனால் தங்களின் கள்ள உறவுக்கு இடையூறாக இருக்கும் குல்சி தேவியைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த மாமனாரும் மருமகளும், டைல்ஸ் வெட்டும் கிரைண்டர் மிஷினை (Tile-cutting grinder machine) வைத்து அவரை மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
பின்னர், தங்களின் கொடூரக் குற்றத்தை மறைப்பதற்காகப் பிணத்தை ஒரு அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்துள்ளனர்.
சில நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டிலிருந்து பயங்கரமான துர்நாற்றம் வீசியதை அடுத்து, சந்தேகமடைந்த கிராம மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், அழுகிய நிலையில் இருந்த குல்சி தேவியின் உடலைக் கைப்பற்றி நடத்திய அதிரடி விசாரணையில் இந்த பகீர் கொலைக் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து, கள்ளக் காதலில் கண்மூடித்தனமாக இருந்த மாமனார் தௌலத் சாவ் மற்றும் மருமகள் பிரீதி குமாரி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
