முன்னணி வங்கித்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆஃப்  இந்தியா, நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. வீட்டுக் கடன்களில் பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன் மூலம் வீட்டுக் கடன் 65 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டது. இந்தச் சலுகை டிசம்பர் 31, 2023 வரை கிடைக்கும்.

ஆனால் CIBIL மதிப்பெண் அடிப்படையில் இந்த தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்து. இது தவிர, வீட்டுக் கடன் கையகப்படுத்துதல் மீது 20 bps கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.