சீனாவில் ரியல் எஸ்டேட் தொழில் வெகுவாக சரிவை சந்தித்துள்ளது. இதனால் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மக்களை ஈர்க்கும் விதமாக விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் டிரையஜின் நகரில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வித்தியாசமாக விளம்பரம் செய்துள்ளது.

அது மக்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாது அரசின் கவனத்தையும் தன் வசம் ஈர்த்துள்ளது. அதாவது ஒரு வீடு வாங்கினால் மனைவி இலவசம் என்று சுவரொட்டிகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர்கள் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அரசு தலையிட்டு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு 3 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் புதிய வீடுகளை வாங்கி மனைவிக்கு கொடுங்கள் என்ற விளம்பரத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.