இந்தியாவில் நகரங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு வீடுகள் வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. இது மலிவான வீட்டுக் கடன்களை வழங்கும். குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என்றும் வட்டி மானியத்தின் சுமையை அரசு ஏற்கும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை இறுதி செய்ய அரசு தயாராக இருப்பதாகவும் விரைவில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பல புதிய திட்டங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது