நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இதன் பலன்கள் கிடைப்பதில்லை. மாறாத மத்திய அரசே நிர்ணயித்துள்ள தகுதி படை வீடுகளை பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த உதவி தொகை வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் 14 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 15 வது தவணை பணம் எப்போது வரும் என்ற விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இதற்கு முன்னதாக விவசாயிகள் அனைவரும் தங்களின் கேஒய்சி கணக்குகளை சரிபார்க்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கேஒய்சி அப்டேட் செய்யாத விவசாயிகளுக்கு டிஎம்கிசான் திட்டத்தின் கீழ் நிதி உதவி கிடைக்காது. இதற்காக பிஎம் கிசான் கணக்கில் திருத்தங்கள் செய்வதற்கு அல்லது கேஒய்சி அப்டேட் போன்ற பணிகளுக்கு https://pmkisan.gov.in/என்ற இணையதளத்தில் தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.