இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பெங்களூரில் 854 கோடியை 84 வங்கி கணக்கில் இருந்து திருடிய சைபர் குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். எம்பிஏ பட்டதாரியான சீனிவாஸ் மற்றும் சாப்ட்வேர் இன்ஜினியர் பனிந்திரா இருவரும் பெங்களூரில் 1 BHK இல் வீடு எடுத்து தங்கி 8.5 லட்சம் முதலீட்டில் இரண்டு ஆண்டுகளில் இந்த மோசடியை செய்துள்ளனர். பெண்கள் உட்பட இரண்டு இளைஞர்களை வேலைக்கு வைத்து இந்தியா முழுவதும் ஆன்லைனில் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.