நாட்டின் முன்னணி அரசு காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான பாலிசிகளை வழங்கி வருகின்றது. அதன்படி முதுமை காலத்தில் நல்ல வருமானம் தரும் எல்ஐசியின் ஜீவன் லேப் என்ற பாலிசி திட்டம் குறித்த அறிவிப்பை இந்த பதிவில் காணலாம். அதாவது முதலீடு செய்த தொகையை வாடிக்கையாளர்கள் கணக்கு முதிர்வின்போது மொத்தமாக இதில் பெற்றுக் கொள்ள முடியும்.

ஒருவர் 25 வயதில் 25 கால பாலிசி திட்டத்தின் சேமிக்க தொடங்கினால் முதிர்வு காலத்தில் வட்டியுடன் சேர்த்து இரட்டிப்பாக உங்களது பணம் கிடைக்கும். அதாவது தினந்தோறும் 296 ரூபாய் என்ற கணக்கில் ஒவ்வொரு மாதமும் 8,893 ரூபாய் டெபாசிட் செய்தால் 25ஆவது ஆண்டு நிறைவடைந்த பின்னரும் 60 லட்சம் ரூபாயாக திருப்பி வழங்கப்படும். இருந்தாலும் காப்பீடு செய்யப்பட்ட நபர் பாலிசி காலத்திற்கு முன்பாக உயிரிழந்து விட்டால் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நாமினிக்கு காப்பீடு தொகை வழங்கப்படும். எனவே முதுமை காலத்தில் நல்ல வருமானம் பெற விரும்பினால் உடனடியாக இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறுங்கள்..