உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களுக்கு ஒரு புது வசதியை கொண்டுவந்துள்ளது.

அதாவது  வாட்ஸ்அப் வீடியோ அழைப்பின் போது போன் திரையைப் பகிரும் வாய்ப்பு புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது. வீடியோ அழைப்பின் போது ‘பகிர்’ ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் இந்த அம்சத்தை அணுகலாம். இதேபோல், மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் ஃபேஸ்புக் பதிவில், லேண்ட்ஸ்கேப் மோடில் படத்தை அகலமான பார்வையில் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.