நாடு முழுவதும் 7 லட்சத்து 25 ஆயிரத்து 900 செல்போன்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை தொலைந்து போன 2 லட்சத்து 95 ஆயிரத்து 846 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் இதுவரை திருடப்பட்ட, தொலைந்துபோன செல்போன்களின் 25,135 சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செல்போன் தொலைத்தவர்கள், போலீஸ் ஆகிய இருவரும் ceir.sancharseathi.gov.in என்ற இணையதளம் மூலம் தொலைந்த செல்போனை முடக்கலாம். முடக்கப்பட்ட செல்போனில் புதிய சிம் கார்டு இணைத்தால் செல்போன் நிறுவனத்திற்கும், செல்போனை தொடர்புடைய தொலைத்தவர்களுக்கும், போலீசுக்கும் sms அனுப்பப்படும். மேலும், இந்த இணையதளத்தில் செல்போன் வாங்கும் முன்பு, எவ்வளவு பழைய செல்போன் என்பது பற்றி ஐ.எம்.இ.ஐ எண் மூலம் அறியலாம்.