இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000 ரூபாய் என்று வருடத்திற்கு மூன்று தவணையாக வழங்கப்படுகிறது.  இதுவரை 13 தவணை வழங்கப்பட்டு வந்த நிலையில் 14வது தவணை இம்மாதம் 27ஆம் தேதி விவசாயிகளுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில் மொத்தம் ரூ.6,000 விவசாயிகளின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இம்மாதம் 27ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் நடைபெறும் விழாவில்  பிரதமர்  நரேந்திர மோடி இந்த நிதியை வெளியிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டம் 2019-இல் தொடங்கப்பட்டதில் இருந்து தகுதியான விவசாயிகளுக்கு ரூ.2.24 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.