நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது தெரிந்த விஷயம் தான். நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்ததை தொடர்ந்து பல உணவகங்கள் தங்கள் மெனுவிலிருந்து தக்காளியை நீக்கி வருகின்றன. பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்டு தனது உணவு பொருட்களில் தக்காளி சேர்க்கப் படாது என முன்னதாக அறிவித்திருந்தது.

சமீபத்தில், மெக்டொனால்டை தொடர்ந்து சப்வே உணவகத்திலும் தக்காளி உபயோகிப்பதை நிறுத்தியதாக அறிவித்துள்ளனர். சப்வே-வின் விற்பனை நிலையங்களில் சாலட் மற்றும் சாண்ட்விச்களில் தக்காளியை பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.