இந்தியாவில் ஏழை எளிய விவசாயிகளுக்கு பல மாநிலங்களிலும் அரசு கடன் தள்ளுபடி வழங்குகிறது. அதன்படி ஜார்கண்ட் மாநில அரசு கடனை திருப்பி செலுத்த முடியாத விவசாயிகளின் கடனில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் புதிய பயிர் கடன் கிடைப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட நோக்கத்திற்காக விவசாயிகளுக்கு இது போன்ற கடன் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த கடன் தள்ளுபடியை பெறுவதற்கு விவசாயிகள் ஜார்கண்ட் மாநிலத்தில் நிரந்தர குடியிருப்பாளர்களாக இருப்பது அவசியம்.

அதேசமயம் கிஷான் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்ற சிறு மற்றும் குறு விவசாயிகளாக இருக்க வேண்டும். சொந்த இடத்திலேயே சாகுபடி செய்யும் விவசாயி அல்லது குத்தகைக்கு எடுத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்த கடன் தள்ளுபடி கிடைக்கும். ஒரு குடும்பத்தில் ஒரு விவசாயிக்கு மட்டுமே கடன் தள்ளுபடி சலுகை வழங்கப்படும். மேலும் 2020 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்கு முன்பு வங்கியில் கடன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதன் பிறகு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு இந்த தள்ளுபடி கிடைக்காது எனவும் அரசு தெரிவித்துள்ளது.