இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இப்போது பல சிறப்பு திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி வயதான காலத்தில் மாத வருமானம் தரும் வகையில் எஸ்பிஐ வங்கி annuity deposit scheme என்ற புதிய சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு முறை மொத்தமாக முதல் தாள் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் நீங்கள் முதலீடு செய்வதற்கான அசல் மற்றும் வட்டி தொகையுடன் சேர்த்து மாதந்தோறும் வருமானமாக பெறலாம். நீங்கள் மாதந்தோறும் இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய நினைத்தால் இப்போதே சேமிப்பை தொடங்குங்கள். இதில் குறைந்தபட்ச முதலீடாக ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டுக்கான அசல் மற்றும் வட்டி குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு உங்களுக்கு மாத வருமானமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.