இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்காக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தனது 2019 ஆம் ஆண்டு மத்திய அரசால் பிரதான் மந்திரி கிஷான் மந்தன் யோஜனா என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் மூலமாக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முதியோர் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் அறுபது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் தோறும் குறைந்தபட்சம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஒருவேளை விவசாயி மரணம் அடைந்து விட்டால் கணவன் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியமாக 50 சதவீதம் ஓய்வூதியம் கிடைக்கும். இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் உறுப்பினராக சேர தகுதியான விவசாயிகள் ஓய்வூதிய நிதிக்கு சந்தா செலுத்த வேண்டும் எனவும் சராசரியாக 29 வயதிற்குள் மாதம் 100 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர அருகில் உள்ள பொது சேவை மையத்தை விவசாயிகள் அணுகலாம்.