உத்திரபிரதேச மாநிலம் அயோத்திய பிரம்மாண்டமாக 2000 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில் கும்பாபிஷேகமானது ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் இந்த விழாவில் சுமார் 11 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ராமரை வரும் 25 ஆம் தேதி முதல் பொதுமக்கள் தரிசிக்கலாம் என்று அயோத்தி ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு பிறகு ஜன.24 முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை சடங்குகள் மரபுகளின்படி நடக்கும். 23 ஆம் தேதி முதல் கோயில் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்படும். 24 ஆம் தேதி சிறப்பு வழிபாடுகள் நடத்தி, மறுநாள் மக்களின் தரிசனத்துக்காக திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.