அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணம். பள்ளி சேர்க்கை முதல் ரயில் டிக்கெட், சிம்கார்டு என அனைத்து விஷயங்களுக்குமே ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆதார் கார்டை எடுக்கும் பொழுது பல தவறுகளை மக்கள் செய்கிறார்கள். ஆதார் அட்டையை இனி பிறப்பு சான்றாக ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையத்திற்கு UIDAI உத்தரவிட்டுள்ளது.

பிறப்புச் சான்றாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆதாரை உடனடியாக நீக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு ஆதார் சட்டத்தின்படி ஆதார் அட்டையை பிறப்பு சான்றாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதை UIDAI சுட்டிக் காட்டியுள்ளது