இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான ஆட்சி நடைபெற்ற வரும் இடையில் விதவைப் பெண்களுக்காக சொந்த வீடு திட்டம் குறித்து அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதாவது விதவை மற்றும் விவாகரத்து பெற்ற பெண்கள் வீடு கட்ட நிதி உதவி வழங்க முக்கிய மந்திரி வித்யா அவம் ஏகல் நரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் விவாகரத்து மற்றும் விதவைப் பெண்களைத் தவிர கணவனால் கைவிடப்பட்ட அல்லது கணவர் காணாமல் போன பெண்கள், அனாதைகள் மற்றும் கவனிக்க ஆதரவற்ற பெண்கள் போன்ற ஒற்றைப் பெண்களும் பயனடைய முடியும். இதில் 7000 பெண்கள் 1.50 லட்சம் ரூபாய் நிதி உதவி பெறலாம். வீடு கட்டுவதற்கு நிதி உதவி வழங்கப்படுவதோடு வீடுகளுக்கு தேவையான மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற இதர அடிப்படை வசதிகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.