ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்தவர் ரேகா(55). இவரது கணவர் காவ்ரா. நிரந்தர வேலை இல்லாததால் காவ்ரா குப்பை சேகரித்து வாழ்க்கை நடத்தி வந்தார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் உள்ளனர். இதில் பிறந்த சில நாட்களில் 5 குழந்தைகள் இறந்துவிட்டனர். காவ்ரா-ரேகா தம்பதியினரின் ஐந்து பிள்ளைகளுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ரேகா மீண்டும் கர்ப்பமானார். நேற்று பிரசவ வழியில் துடித்த ரேகாவுக்கு 17 ஆவதாக குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். காவ்ரா தனது மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்கும் போது இது நான்காவது பிரசவம் என பொய் கூறியுள்ளார். இந்த தம்பதியினருக்கு சொந்த வீடு கிடையாது.

பிள்ளைகளின் பசியை தீர்க்க காவ்ரா 20 சதவீத வட்டிக்கு காவரா லட்சக்கணக்கில் ஏற்கனவே கடன் வாங்கி அதனை அடைக்க அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில் ரேகாவின் மகள் ஷீலா கூறும்போது வாழ்வதற்கு பல போராட்டங்களை எதிர்கொள்கிறோம். எங்கள் தாய்க்கு இத்தனை குழந்தைகள் இருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

குழந்தைகளுக்கு கல்வியை வழங்க முடியவில்லை. பிரதம மந்திரி ஆவாஸ் திட்டத்தின் கீழ் ஒரு வீடு எங்களுக்கு இருந்தாலும், நிலம் எங்கள் பெயரில் இல்லாததால் நாங்கள் வீடு இல்லாதவர்களாகவே இருக்கிறோம். பசி தீர்க்கவும், கல்வி வழங்கவும், திருமணம் செய்து வைப்பதற்கும் போதுமான பண வசதி இல்லை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொந்தரவுகளை சந்தித்து வருவதாக கூறியுள்ளார்