இன்ஸ்டாகிராமில் வைரல் வியூஸ்களுக்காகச் இளைஞர் ஒருவர் தெருநாய்களைத் துன்புறுத்தி வெளியிட்ட வீடியோ தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அமைதியாகப் படுத்திருக்கும் நாய்களை நோக்கி ஓடிவந்து, அவற்றை இளைஞர் ஒருவர் தாண்டி ‘டைவ்’ (Dive) அடிக்கிறார். அப்படி அவர் லேண்ட் ஆகும்போது, அங்கே படுத்திருந்த இரண்டு நாய்களின் கழுத்தின் மீதே மிகக் கொடூரமாக மிதிக்கிறார். அவர் அந்த ஸ்டண்டைச் செய்து முடித்த பிறகு, அதைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றொரு நாய், அவரைத் தாக்கி கடிக்கப் பாய்கிறது.

​வியூஸ்களுக்காக வாயில்லா ஜீவன்களை இவ்வளவு கொடூரமாக வதைப்பது எந்த விதத்தில் நியாயம்? நாய்களின் அமைதியைக் குலைத்து, அவற்றுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும் இந்த பைத்தியக்காரத்தனமான செயலுக்குப் பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பொறுப்பில்லாமல் கன்டென்ட் உருவாக்குவது சமூகத்திற்குச் சீர்கேடு என்பதை உணர்த்தும் வகையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.