அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டங்களை வகுத்துள்ளது.  நரேந்திர மோடி உணவு மற்றும் பொது விநியோகம், நுகர்வோர் விவகாரங்கள், பெட்ரோலியம், வர்த்தகம், விவசாயம் மற்றும் நிதி ஆகிய அமைச்சகங்களிடம் அறிக்கை கேட்டுள்ளார். பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க அனைத்து அமைச்சகங்களுடன் இணைந்து ஒரு திட்டத்தை தயாரித்து வருகிறது.

சுதந்திர தினத்தன்று ஆற்றிய உரையிலும் விலைவாசி உயர்வு குறித்து பிரதமர் கவலை தெரிவித்திருந்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த பிரச்னையில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க மும்முரம் காட்டி வருகிறது. விரைவில் பொதுமக்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.