மன அழுத்தம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பான ஒன்று தான். மனிதனுக்கு உணர்ச்சிகள் அதிகமாவதும், ஒரு சில நேரங்களில் உணர்ச்சியற்று இருப்பதும் பொதுவான விஷயம். இந்தியாவில் பணிபுரியும் 76 சதவீத ஊழியர்களுக்கு மன அழுத்தம் காரணமாக பணியில் எதிர்மறையான தாக்கம் ஏற்படுவதாக ADP நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மன அழுத்தத்தால், 49 சதவீத ஊழியர்கள் மன நல ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. சர்வதேச அளவில் 65 சதவீத தொழிலாளர்களும் இந்த பிரச்சனையை எதிர்கொள்வதாகவும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.