தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற பகுதியில் நடைபெற்றது. இந்த முதல் மாநாடு நடைபெற்ற இடம் கொடுத்த விவசாயிகளை கௌரவப்படுத்தும் விதமாக நடிகர் விஜய் நேற்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை நேரில் அழைத்து விருந்து கொடுத்தார். அதோடு ஒரு தாம்பூல தட்டு அதில் வேஷ்டி சேலை வாழைப்பழம், ஆரஞ்சு பழம் உட்பட 5 வகையான பழங்கள், மஞ்சள் குங்குமம் மற்றும் பூ போன்றவற்றை கொடுத்தார்.

அதன் பிறகு பந்தல் ஏற்பாட்டை கவனித்துக் கொண்டவருக்கு தங்க மோதிரத்தை பரிசாக வழங்கிய விஜய் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளருக்கும் தங்க மோதிரம் ஒன்றினை பரிசாக கொடுத்தார். இந்நிலையில் நடிகர் விஜய் கொடுத்த பரிசுகள் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் விஜய் விவசாயிகளுக்கு இடம் கொடுத்ததற்காக பணம் மட்டுமே கொடுக்காமல் அவர்களை நேரில் அழைத்து கௌரவ படுத்தியது மற்றும் அவர்களிடம் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர்கள் கூறினார்கள். நடிகர் விஜய் தான் அடுத்த முதல்வராக வரவேண்டும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். இது தொடர்பான வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.