தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய். இவருடைய கட்சி அலுவலகத்தில் நேற்று விவசாயிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதாவது முதல் மாநாடு நடத்த இடம் கொடுத்த விவசாயிகளை அழைத்து விருந்து கொடுத்ததோடு அவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி கௌரவித்தார். தங்க மோதிரத்தை கூட இருவருக்கு பரிசாக விஜய் வழங்கினார். நடிகர் விஜயின் முதல் மாநாடு கடந்த மாதம் நடைபெற்றது. அதன் பிறகு நடிகர் விஜய் முன்னதாக 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளை அழைத்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார்.

இந்நிலையில் நடிகர் விஜயிடம் சிறுவன் ஒருவன் வைத்த கோரிக்கை தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. பிரபல தொலைக்காட்சியின் நிருபர் ஒரு சிறுவனிடம் பேட்டி எடுத்தார். அந்த சிறுவனிடம் நீங்கள் விஜயிடம் என்ன கோரிக்கை வைத்தீர்கள் என்று கேட்டபோது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கேட்டதாகவும் விஜய் கண்டிப்பாக அதை சரி செய்யலாம் என்று கூறியதாகவும் கூறினான். அந்த சிறுவன் நான்காம் வகுப்பு படித்து வரும் நிலையில் எதற்காக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கேட்டபோது அது மிகவும் கெட்டது உடம்புக்கு நல்லதில்லை என்பதால் மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக கூறினார். மேலும் இது தொடர்பான வீடியோவை விஜய் ரசிகர்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.