தமிழகத்திலுள்ள விமான நிலையங்களில் விமான நிலைய மேம்பாட்டு கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கப்பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி தற்போது வரைக்கும் உள்நாட்டு விமான பயணிக்கு 205 ரூபாயும், சர்வதேச விமான பயணிக்கு 300 ரூபாயும் வசூல் செய்யப்பட்டது. எனினும் இப்போது மத்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்ட உத்தரவின் படி உள்நாட்டு விமான பயணிக்கு ரூ.90 அதிகரித்து ரூ.295 வசூலிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதோடு சர்வதேச பயணிக்கு ரூ.150 அதிகரித்து ரூ.450 வசூல் செய்யப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இந்த விமான நிலையங்களின் மேம்பாட்டு கட்டணம் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் நடைமுறைபடுத்தப்பட்டு இருப்பதாக மத்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்கு முறை ஆணையம் இப்போது அறிவித்து உள்ளது. இது தவிர இந்த விமான மேம்பாட்டு கட்டணம் பயணிகளின் விமான டிக்கெட்டுடனே சேர்த்து வசூலிக்கப்படும் என்றும் பயணி புறப்படும் விமான நிலையத்தில் மட்டும் இக்கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.