விமான டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு கூகுள் புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. இந்த அம்சமானது பயனாளர்களுக்கு மிகவும் மலிவான விலையில் விமான டிக்கெட்களை வாங்குவதற்கான சிறந்த நேரத்தை கூகுளின் நுண்னறிவு மூலம் பரிந்துரை செ்யயும். மேலும் விலை உத்தரவாதத்தை இது அளிக்கும். சிறப்பு அம்சமாக முன்பதிவு செய்துள்ள விமானம் புறப்படுவதற்கு முன் பயனாளர்கள் முன் பதிவு செய்த டிக்கெட்டின் விலையைவிட குறைவாக இருக்கும் பட்டசத்தில், கூகுள் பே மூலம் அந்த விலை வித்யாசத் தொகையை கூகுள் பயனாளருக்கு திருப்பி செலுத்தும் வசதியும் உள்ளது.