உலகப் புகழ் பெற்ற ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பாராகிளைடிங் வீரர் பெலிக்ஸ் பாம்கார்ட்னர் (வயது 56), பாராகிளைடிங் விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகமான செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டு ‘ரெட் புல் ஸ்ட்ராடோஸ்’ என்ற திட்டத்தின் கீழ், அவர் பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையே உள்ள எல்லையிலிருந்து, ஸ்கை டைவிங் மூலம் பூமியை நோக்கி பாய்ந்து உலக சாதனை படைத்தவர். அப்போது அவர் ஒலியின் வேகத்தைவிட 1.25 மடங்கு அதிகமாக விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Felix Baumgartner, World Record Holder for Skydiving, Dead at 56 After Paragliding Accident: https://t.co/rPcyCcDngB pic.twitter.com/U1l79ljm2p
— E! News (@enews) July 18, 2025
“>
இந்த சாகசத்திற்குப் பிறகு பாராசூட் உதவியுடன் நியூ மெக்சிகோ பாலைவனத்தில் பத்திரமாக தரையிறங்கிய அவர், விமானம் இல்லாமல் ஒலியைவிட அதிக வேகத்தில் பயணம் செய்த முதல் மனிதர் என்ற பெருமையை பெற்றார். அவரின் அந்த சாதனை உலக அளவில் பரிசுபெற்றது. துணிச்சலின் உருவம் என்று குறிப்பிடப்பட்ட பெலிக்ஸ், பல வருடங்களாக பாராகிளைடிங் மற்றும் ஸ்கைடைவிங் போன்ற சாகச விளையாட்டுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் வீரராக இருந்தார்.
#RIP Felix Baumgartner dies in paragliding crash: Relive daredevil’s 2012 24-mile jump from space pic.twitter.com/D5PMoE77Uk
— JovanHuttonPulitzer™ אני לא סובל אידיוטים! (@JovanHPulitzer) July 18, 2025
“>
இந்த நிலையில், இத்தாலியின் போர்டோ சான் எல்பிடியோ என்ற இடத்தில் பாராகிளைடிங் செய்து கொண்டிருந்த போது, அவர் பயணித்த பாராகிளைடர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த ஓட்டலின் நீச்சல் குளம் அருகே தரையுடன் மோதி விழுந்ததாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டும், அவர் உயிரிழந்தார் என மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டது. வீரர்களுக்கும் சாகசத்திற்கும் நிகராகிய அந்த மனிதர் இப்போது இல்லாத நிலையில், உலகம் முழுவதும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
