
6 பேர் உயிரிழப்பிற்கு காரணமான தனியார் பேருந்து ஓட்டுனரின் உரிமத்தை போக்குவரத்து அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்
கடந்த ஏப்ரல் மாதம் ஏற்காட்டில் இருந்து சேலம் புதிய பேருந்து நிலையம் நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து 13-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் தனியார் பேருந்து ஓட்டுனரின் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் ஜனார்த்தனின் ஓட்டுனர் உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்து கிழக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.