மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. அனந்த்நாக் மாவட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவரை சந்தித்து ஆறுதல் கூற சென்றபோது விபத்து நடந்துள்ளது. காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில், மெகபூபா முப்தி காயம் எதுவும் இன்றி தப்பினார்.

கார் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெகபூபா முப்தி காயமின்றி தப்பிய நிலையில், திட்டமிட்டபடி அனந்த்நாக் பயணத்தை தொடர்ந்தார்.